நாவலின் பிராதன அம்சம் என இதை நினைக்கிறேன் :
பாரத நிலப்பரப்பில் இருக்கும் கொற்றவை ( கொலை தெய்வம் ) பற்றிய படிமத்தை அம்பை, கத்ரு சத்யவதி ,மற்றும் சில பெண் பாத்திரங்கள் வழியாக விரிவாக பேச முற்படும் நாவல் என முதற்கனல் நாவலை வகை படுத்தலாம் .
இந்த நாவல் தேவியை ( சக்தி )யை ஆதாரமாக கொண்டது , தேவி நிகழ்த்தும் நாடகம்தான் பிரபஞ்ச தோற்றம் அழிவு என .
சக்தி தன்னிலிருந்து உருவான சிவனை அழிப்பதன் வழியாக பிரபஞ்ச அழிவை உருவாக்கி ,மீண்டும் பிரபஞ்ச தோற்றத்தை நிகழ்த்தும் சுழற்சியை இந்நாவல் பல கதைகள் வழியாக சொல்கிறது என சொல்லலாம் . முக்கியமாக கடைசியில் வரும் கத்ரு கதை , கார்த்தியேயினி கதை , அம்பை பீஷ்மரை கொல்ல நினைக்கும் கதை , சத்யவதி ஆண்களை தன் பகடைகளாக ஆக்கி தனது நோக்கங்களை நிறைவேற்றி செல்லும் கதை என. முக்கியமாக கொற்றவை என நாவல் திரும்ப திரும்ப சொல்லும் படிமம் .
அழிவிற்கான காரணம் என கத்ரு கதை தன்னகங்காரம் என சொல்கிறது ( தன்னகங்காரம் என்பது பிரபஞ்சத்தின் ஒரு உறுப்பு என தன்னை என்னாது , தன்னை ஒரு சுயமாக எண்ணுதல் எனும் அர்த்தத்தில் சொல்கிறேன் ) , இதை அம்பை பீஷ்மர் கதை வழியாக இந்நூல் ஆராய்கிறது என சொல்லலாம் , பீஷ்மரின் மனம் என்பது தனக்கிருக்கும் கடமைகளினால் ஆனது என சுருக்கமாக சொல்லலாம் , இதை தவறு என சொல்லிட முடியாது , ஆனால் இன்னொரு கோணத்தில் அப்படி எண்ணுவது படைப்பின் நிகழ்விற்கு எதிராக நிற்கும் ஒரு எண்ணம் , 'படைப்பின் நிகழ்வு திசைகளை நான் தீர்மானிப்பேன் ' என்பதை சொல்வதை போல , இந்த எண்ணம் எப்படி அழிவை நோக்கி கொண்டு செல்கிறது என்பதை விவரிக்கும் கதை என இதை சொல்ல முடியும் .
இதில் ஒரு சுவாரஸ்யமான முரண் இருக்கிறது , பீஷ்மர் பிரம்மச்சரியர் , ஆனால் இந்த பிரம்மச்சர்யம் தன்னியல்பான ஒன்று அல்ல , சூழல் அளித்த ஒன்று அது , இந்த இடத்தில் வியாசரின் மகனான சுகனை வைக்கலாம் , அவர் அவரது காமமற்ற இயல்பு என்பது தான் என்ற ஒன்றை உணராததால் நிகழ்வது , அவர் பிரபஞ்சத்தில் இருந்து தன்னை பிரித்து கொள்ள வில்லை .
தான் என எண்ணம் கொண்டவர் அந்த எண்ணம் அழிவது பெண்ணுடன் கலப்பதன் வழியாக , பீஷ்மர் தான் எனும் எண்ணம் கொண்ட பிரம்மச்சாரி , இது ஒரு முரண் , இந்த முரண் தான் அழிவை நோக்கி நடத்தும் புள்ளி .
........
இதை தாண்டி இந்நாவல் துணை பேசுபொருட்களாக நிறைய விஷயங்களை பேசுகின்றன , முக்கியமாக பாரத நிலத்தின் சித்திரம் , இன்னொன்று இந்நாவலில் பிரபஞ்ச நிகழ்வின் ( இயக்கத்தின் , நகர்வின் ) ஊக்கு விசையாக காமம் எப்படி இருக்கிறது என்பதை கதைகள் வழியாக அழகாக காண முடிகிறது .
......
கடைசியாக
இதில் இருக்கும் முக்கியமான மறை பேசுபொருள் என்பது அன்னை மீதான காமம் என்பதை சொல்லலாம் , அதை மேற்கு ஈடிபஸ் காம்ப்லக்ஸ் என குற்ற உணர்வு நோக்குடன் அணுகுகிறது என எண்ணுகிறேன் , ஆனால் இந்திய மரபில் இந்த உணர்வு மேல்நிலையாக்கம் செய்யப்பட்டு நேர்மறையான ஒன்றாக அணுகுகிறது . சக்தி வழிபாடு , யோனியை பிரபஞ்ச படைப்பின் குறியீடாக எண்ணுவது எல்லாம் இந்த உணர்வினை மேல்நிலையாக்கம் ஆக்கப்பட்ட விஷயங்கள்தான் .
சத்யவதி - சித்ராங்கதன் ,விசித்திரவீரியன் கதை இந்த விஷயத்தை மேல்தளத்தில் பேசுகிறது என்றால் அம்பை - பீஷ்மர் கதை கதை அடித்தளத்தில் வைத்து பேசுகிறது . அம்பை படகில் பீஷ்மரிடம் கங்கையில் விழுந்து சாவேன் என்று சொல்வது அம்பையை பீஷ்மரின் அன்னையுடன் இணைக்கும் ஒரு இடமாக கூட இருக்கலாம் .