( இரு ஆண்டுகள் முன்பு எழுதியது )
தூரன் விழாவில் பிகே ராஜ சேகரன் அவர்கள் உரையாடல் நிகழ்வில் அவரிடம் கேட்க பட்ட ஒரு கேள்வி மற்றும் அதற்கு அவர் அளித்த பதிலும் எனக்கு இப்போது வரை மனதில் தொடர்ந்து ஓடி கொண்டிருக்கிறது . தமிழகத்தில் இலக்கிய விமர்சகர் என்பவர் புனைவு எழுத்தாளராகவும் இருப்பது ஒரு கூடுதல் அம்சம் , விமர்சகர் எழுத்தாளராகவும் இருப்பதால் எழுத்தில் இருக்கும் அவரால் மேலதிகமாக சரியாக புரிந்து கொள்ள முடியும் என்ற ஒரு பொது எண்ணம் இருக்கிறது , இந்த பொது எண்ணம் மலையாள இலக்கிய உலகில் உள்ளதா ,இது பற்றிய உங்கள் கருத்து என்ன என்று கேட்க பட்டது . ராஜசேகரன் படைப்பாளி அல்ல , விமர்சன எழுத்தாளர் மட்டுமே என்பதால் இது அவரது நிலையை கேள்விக்கு உட்படுத்தும் கேள்வியாகவும் இது இருந்தது . அவர் இப்படியான எண்ணம் கேரளத்தில் இல்லை என்றார் , கேரள சூழலை சொன்னார் , புனைவு எழுதுவதும் ,விமர்சனம் எழுதுவதும் தனித்தனி பணிகள் , வேறுவேறு ஆட்கள் செய்ய வேண்டிய விசயம் என்று . எனக்கு அவர் சொன்னதில் பிடித்த அம்சம் என்பது அவர் அந்த கேள்விக்கு கடைசியாக சொன்ன என் விமர்சன கருத்தை சரி என்றால் ஏற்கவும் ,தவறு என்றால் நிராகரிக்கவும் செய்யலாம் , அவ்வளவுதான் , மாறாக விமர்சனம் எழுதியவர் பின்னணி என்பது தேவையற்றது என்று சொன்னது . ( அங்கு கேட்கப்பட்ட கேள்வி மற்றும் சொன்ன பதிலும் இதே வார்த்தைகளில் அல்ல ,அங்கு சொல்ல பட்டதை இவ்வாறு நான் புரிந்து கொண்டேன். )
உண்மையில் இந்த அவரது பதில் ( சரி என்றால் .. ) இலக்கியம் தாண்டி எல்லாவித விவாதங்களிலும் பொருத்தி பார்க்க முடியும் என்று தோன்றுகிறது . பெரும்பாலும் விவாதங்களில் ஒருவர் எடுக்கும் நிலைப்பாடுகள் , விமர்சனங்கள் ஏன் அந்த நிலைப்பாட்டை எடுக்கிறார்/ சொல்கிறார் என்று பார்ப்பேன் , 90% ஏதாவது தனிப்பட்ட வெளியே தெரியாத ஒரு காரணம் இருக்கும் ,அதை மறைத்து முன்வைப்பார்கள் . இது தாண்டி விவாதத்தில் பேச படும் விசயம் சார்ந்த அனுபவம் அல்லது அது சார்ந்த நுண்ணர்வு இல்லாமல் தட்டையாக புரிந்து கொண்டு முன் வைப்பவர்களும் இருப்பார்கள் . உண்மையில் இப்படி விவாதிப்பவரின் காரணங்கள் பார்க்க ஆரம்பித்து அதுவே ஒரு நோய்கூறு போல எனக்கு ஆகி விட்டது . இந்த மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும் என்று நினைத்தேன் .
இதற்கு ராஜ சேகரன் பதில் எனக்கு ஒரு திறப்பு அளித்தது. அதாவது இனி கேள்வியை ,விமர்சனத்தை மட்டுமே பார்க்க வேண்டும் , அதை சரி எனில் ஏற்கலாம் , தவறு எனில் கண்டு கொள்ளாமல் விட்டு விடலாம் என்று . உண்மையில் ஒவ்வொருவரும் இந்த நிலைப்பாட்டை கைக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது . விமர்சனம் மற்றும் கேள்விகள் எங்கிருந்து வந்தாலும் அதை தகுதி அற்ற ஒருவர் கேட்டாலும் அதன் பின்னணி பற்றி பார்க்காமல் அந்த விமர்சனம் / கேள்வி சரியா என்று மட்டும் பார்ப்பது என .
இது இன்னொரு விதத்திலும் எனக்கு பயன் அளிக்கிறது , எனக்கு நான் காணும் விசயங்களில் எனக்கு விமர்சனம் தோன்றினாலும் அதை முன்வைக்கலாமா , அதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா என்று யோசிக்காமல் என் கேள்வி / விமர்சனத்தை முன்வைக்க இயலும் , அது சரியாக இருக்கும் பட்சத்தில் அதற்கு ஏற்போ , மறுப்போ நிகழும் என .
மேலும் விமர்சனத்தை ,கேள்வியை எதிர்கொள்பவர் அதை சரி என்றால் ஏற்றுக்கொள்ளவும் , தவறு எனில் கண்டுகொள்ளாமல் விடவும் கொள்ளும் மனநிலை கொண்டிருப்பதே சரியான மனநிலை என்றும் தோன்றுகிறது . கேள்வி , விமர்சனம் வைப்பவரின் தகுதியை காண முற்படுவதே கர்வம் கொண்ட மனநிலை வெளிப்பாடு என்று தோன்றுகிறது . இது தவறு என்று சொல்ல வில்லை ,ஆனால் இப்படியான நிலையை எடுக்கும் போது தானாக அந்த விமர்சனத்தை நிராகரிக்கும் இடத்திற்கு வந்து விடுவார்கள் , அந்த விமர்சனத்தில் உண்மை உள்ளதா என்பதை காண விரும்பாத மனநிலைக்கு வந்து விட வாய்ப்பு உண்டு என்று தோன்றுகிறது ,இந்த எண்ணம் முழு சரி என்று சொல்ல வில்லை .
அதேசமயம் எல்லா விமர்சனங்களும் சரியானவை என்று சொல்ல வர வில்லை , மொக்கையான எந்த புரிதலும் இல்லாத விமர்சனங்கள் நிறைய கொட்டி கிடக்கின்றன , இதில் இருந்து தப்பிப்பது என்பது தகுதியானவரின் விமர்சனங்களை மட்டுமே கவனிப்பது என்பதுதான் . நான் சொல்ல வருவது இதை காணும் மனநிலை சார்ந்து மட்டுமே , முன்முடிவுகள் இல்லாமல் ஒரு விமர்சனத்தை அந்த விமர்சனத்தில் இருக்கும் வார்த்தைகளை மட்டும் எடுத்து கொண்டு அது சரியா தவறா என்று அணுகி அதை ஏற்கவும் நிராகரிக்கவும் செய்யும் மனநிலை சரியானதாக இருக்கும் என .
No comments:
Post a Comment