நான்கு வருணங்கள் என்பது எப்போதுமே நம் சூழலில் ஒரு விவாத பொருள் , இது பிறப்பால் உருவாவது எனவும் இந்த வேறுபாட்டை உருவாக்கியவர்கள் பிராமணர்கள் எனவும் நிறுவப்பட்ட உண்மையாக ஆக்கப்பட்டு விட்டது . முதற்கனல் இதை தகர்க்கும் விரிவான சித்திரங்களை வைக்கிறது .
நாவலின் ஒரு சுவாரஸ்யமான இடத்தில் இருந்து இதை சொல்ல முடியும் , பீஷ்மர் கங்கர்கள் எனும் குலத்தை சேர்ந்தவர் , பீஷ்மர் வழியாக அஸ்தினபுரியின் ஆளுகைக்குள் கங்கர் குலம் உள் வருகிறது , பேரரசின் தொடர்பிற்கு பிறகு கங்கர் குலம் நான்கு வருணங்களாக பிரிகிறது என்பது , அதாவது ஒரே குல மக்கள் தங்களை நான்கு வருணங்களாக பகுத்து கொள்கின்றனர் . ஒரு தனிகுடியாக தங்களை தாண்டி வெளியுலகம் இல்லாதவர்களாக வாழும்பொழுது அவர்கள் தேவைகள் மிகவும் குறைவு , பகுத்து நிற்கவேண்டிய அவசியம் இல்லை , வெளியுலகுடன் இணையும் பொழுது தேவைகள் ,வாய்ப்புகள் பெருகுகின்றது , பகுப்புகள் தேவை படுகின்றன, வர்ணங்கள் உருவாகிறது .
இன்னொன்று வளம்தான் அரசுகளை உருவாக்குகின்றன , அப்படி உருவாகும் அரசுகள் அரச இயல்பான சத்ரிய வருணத்திற்குள் வருகின்றன , அப்படி அரசுகள் உருவாகி வரும் சித்திரம் நாவலில் விரிவாக வருகின்றன .
மேலும் பெரும்பாலும் வருண தூய்மை என்பது தொன்மையால் தான் தீர்மானிக்க படுகின்றன , முதலில் உருவான அரச குடிகள் தங்களை தூய்மையானவர்களாக முன்னிறுத்துகின்றன . இதை சாதாரணமாக எல்லா விஷயத்திலும் காணமுடியும் , பழையவர்கள் புதியவர்களை தங்களுக்கு இணையாக எப்போதும் வைக்க மாட்டார்கள் , மாறாக ஒரு படி கீழேதான் வைப்பார்கள் , சாதிய அடுக்குமுறைக்கான முக்கியமான காரணம் என்பது இந்த இயல்புதான் .
அஸ்தினபுரி உட்பட முதலில் எழுந்த பேரரசுகள் தங்களை தூய சத்ரிய குலங்களாக முன்வைத்தன , அதன் அதீதம்தான் தங்களை வானோர்களின் வழிவந்த குருதிகளாக சொல்லும் இயல்பு . இந்நாவலில் ஒவ்வொரு அரசிற்கும் விரிவாக வம்சவரலாறு சொல்லப்படுகிறது . இதை ஞாபகம் வைத்துக்கொள்வதுதான் இந்நாவலை வாசிப்பதில் இருப்பதிலேயே கடுமையான விஷயம் :)
குல தூய்மை என்பதை பகடியாக மாறும் இடமும் இதில் வருகிறது , குருவம்சத்து திருதராஷ்டினனும் பாண்டுவும் மீனவ உதிரங்கள் . இது நாவல் நிகழும் இடங்கள் சுவாரஸ்யமானவை . சாதாரண மீனவ பெண்ணான சத்யவதி சந்தனுவின் மனைவியாக அஸ்தினபுரி தொடர்ச்சியில் இணைகிறாள் , சந்தர்ப்பம் வாய்க்கும்போது தன் அஸ்தினபுரி உதிரம் சாராத உதிரமான வியாசன் வழியாக அஸ்தினபுரியின் உதிர தொடர்ச்சியை மாற்றி தன் மீனவ உதிர தொடர்ச்சியாக அமைக்கிறாள் . எந்த மனமுறை மூலமாக சத்திரியர்கள் தங்கள் அரசுகளை விரிவாக்குகிறார்களோ ,அதே மனமுறையில் உள்ளே வந்து சத்ரிய உதிரத்தையே மாற்றி தன்னுடைய குல தொடர்ச்சியாக ஆக்குகிறாள் சத்யவதி .
இந்த நாவலின் இன்னொரு சிறப்பம்சம் என்பது குலசூழல் என்பது அனுபவமாக நல்ல அம்சமுமாக சொல்லபடுவது . வியாசனுக்கு மீனவ குல பின்னனி என்பது ஒரு தனியான வாழ்பனுபவம் , அந்த வாழ்பனுபவம்தான் வைஸ்வாநரன் கவிதையின் உட்பொருளை அவரினுள் உணர்த்த வைக்கிறது .

No comments:
Post a Comment