சிகண்டி .
வெண்முரசு ஒருவிதத்தில் மறுபிறவி மாதிரியான யதார்த்தத்திற்குள் வராத நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் இருந்து விலகி நிற்கிறது என சொல்லலாம் , முக்கியமாக சிகண்டியின் கதை வழியாக .
சிகண்டி அம்பையின் மறு பிறவி என்று பிற மகாபாரத கதைகள் சொல்கிறது . வெண்முரசு வேறொரு கவித்துவ கதை வழியாக அம்பையின் மகனாக சிகண்டியை கொண்டு வருகிறது .
சிகண்டியின் கதையை பிற இடங்களில் தேடினேன் , ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கின்றன ! பொதுவான ஒற்றுமை என்பது பாஞ்சால மன்னன் துருபதனின் மகள் , பின் ஸ்தூணகர்ணன் வழியாக ஆணாக மாறுகிறாள் . ஒரு கதையில் பெற்றோரின் வருத்தத்தினால் தற்கொலைக்காக காடேகிய போது ஸ்தூணகர்ணனின் மாளிகைக்கு சென்று ஆணாக ஆவது என , இன்னொன்றில் மனைவி யின் இகழ்ச்சி காரணமாக வெளியேறி மாறியது என , இன்னொன்றில் ஒரு கந்தர்வன் பாலினம் மாறி கொள்ளலாமா என கேட்டு , கந்தர்வன் பெண்ணாகவும் சிகண்டி ஆணாகவும் மாறி கொள்வது என .
இந்த கதைகளை விட வெண்முரசில் வரும் சிகண்டியின் வரலாறு சிறப்பான ஒன்று , இதில் வரும் கவித்துவம் மற்ற கதைகளை விட இதை சிறப்பானதாக்கி விடுகிறது . இக்கதையில் சிகண்டி ஒரு பெயரற்ற அநாதை பித்தியின் மகள் , சிகண்டி பிறந்த சில நாட்கள்உள்ளாகவே அவள் இறந்தவுடன் அங்கிருந்த இன்னொரு பித்தியான அம்பையிடன் இணைந்து கொள்கிறாள் சிகண்டி , அம்பையை அன்னையாக எண்ணுகிறாள் , அம்பை அவளை தன் மகனாக உணர்கிறாள் , அம்பை அப்படி உணர்ந்ததனாலேயே தன்னை ஆணாக மாற்றி கொள்கிறாள் சிகண்டி , அவளின் வேண்டுதலை நிறைவேற்றவே பீஷ்மரை கொள்ளும் சபதமேற்கிறாள் சிகண்டி .
இந்த நாவலில் வரும் ஸ்தூணகர்ணன் சிகண்டி சந்திப்பு உருக்கம் நிறைந்த ஒன்று , ஸ்தூணகர்ணன் முதுதந்தையாக , முதுதாயாக வெல்லாம் மாறி மாறி வந்து இப்படி மாறி கொள்வதன் வரும் விலகலை ,இழப்பை ,வலியை சொல்லிகெஞ்சுகிறான் , சிகண்டியின் நினைவில் அன்னையின் சொல் தவிர வேறில்லை , அதற்காக தன்னை முழுவதுமாக தருகிறான் , அது ஒன்றிற்காக மட்டுமே வாழ்கிறான் . சுய விருப்பம் என்ற ஒன்றில்லாத , முற்றிலும் தன்னை இன்னொருவருக்காக தியாகம் செய்த ஒரு லட்சிய பாத்திரம் இந்த நாவலில் வரும் சிகண்டி .
தியானத்தில் அலைபாயும் மனம் பின்பு அடங்கி பின் 'தான்' மறைவதை போல இந்நாவலில் சிகண்டி தன் நோக்கமான பீஷ்மரை கொல்லுதல் என்ற எண்ணத்தில் ஒன்றிணைகிறார் . நாவலில் பீஷ்மரை அறிய முயலும் பகுதிகள் அபாரமாக வந்துள்ளன . பீஷ்மரை தந்தையாக உணர்கிறார் , தன்னை போலவே அவரும் இன்னொன்றிக்காக வாழ்பவர் என்பதை உணர்ந்தும் , அன்னையின் அன்பும் அவரில் இருக்கிறது என்பதை உணர்ந்தும் நேசம் கொள்கிறார் .
இந்நாவலில் சிகண்டி வராகியின் அம்சம் கொண்டவளாக வருகிறாள் .
இன்னொரு சுவாரஸ்யமான அம்சம் அம்பை சிகண்டி கதையில் வருகிறது , அம்பை கதையில் வரும் முருக கடவுள் படிமம் , நாவலில் அம்பை முருகக்கடவுள் கடவுள் கழுத்தில் இருந்த செங்காந்தள் மாலையை பாஞ்சால கோட்டை வாயிலில் மாட்டுகிறாள் , பிறகு அங்கு ஒரு கொற்றவை (அம்பை ) கோவில் வந்து அந்த தெய்வத்திற்கு செங்காந்தள் மாலை அணிகலனாக சூட்டப்படுகிறது ( தினமும் ) , பிறகு அங்கு வரும் சிகண்டி அம்மாலையை எடுத்து தான் அணிந்து கொள்கிறாள் , இன்னொரு பிற நூலில் இந்த மாலையை அணிந்ததால் சால்வ மன்னன் தன் மகளான சிகண்டியை பீஷ்மர்க்கு பயந்து வெளியேற்றுகிறார் என்று வருகிறது .

No comments:
Post a Comment